சென்னை: வார இறுதி நாள் விடுமுறையை ஒட்டி இன்று முதல் 21ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வார விடுமுறையையொட்டி, மக்களின் வசதிக்காக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல, நாளை முதல் டிச.21 வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
இதுவரை 20,000 பேர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம் (அ) TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்து தங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பயணத்தை எளிமையாக மேற்கொள்ளலாம்.
இதே போல் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்புவதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனால் பஸ்களில் அதிக கூட்ட நெரிசல் இருக்காது.