பாரிஸ்: சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் தகவல்… வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்த மேல்முறையீடு மீது ஒலிம்பிக் முடிவதற்குள் முடிவு எடுக்கப்படும் என சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் தெரிவித்து உள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த போட்டியில் ‘பிரீஸ்டைல்’ 50 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், 29, முதல் சுற்றில் ஜப்பானின் யுய் சுசாகியை வீழ்த்தி, ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறினார்.
பைனலில் இருமுறை வீராங்கனைகளின் எடை சோதிக்கப்பட்ட போது வினேஷ் போகத்தின் எடை 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், சர்வதேச மல்யுத்த சங்கம் தகுதி நீக்கம் செய்தது.
தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து கோர்ட் ஆர்பிட்ரேசன் ஆப் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தனக்கு வெள்ளி பதக்கம் வழங்கிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் கூறியுள்ளது.