சென்னை: விடுமுறைக்கு இனி களஞ்சியம் செயலி மூலமே அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு ஊழியர்களுக்கு துறை ரீதியாக உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதில், கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை உருவாக்கியுள்ள களஞ்சியம் செயலியை, அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, இனி விடுமுறை, சம்பள முன்பணத்துக்கு விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்