திருப்பூர்: தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த நம்பியாம்பாளையம் கிராமம் ஒரு தனி அடையாளம் கொண்டுள்ளது. நம் ஊர்களில் பொதுவாக கட்சிக் கொடிகள், போஸ்டர்கள் போன்றவை நிறைந்திருக்கும் நிலையில், இந்த கிராமத்தில் மட்டும் தேசியக் கொடியே மட்டும் பறக்க அனுமதிக்கப்படுகிறது.
கட்சிக் கொடிகள் மற்றும் போஸ்டர்கள் எங்கு பார்த்தாலும் காணப்படும் நிலைமைக்கு மாறாக, இக்கிராமத்தில் எந்தவொரு கட்சிக் கொடியும் பறக்கவிட அனுமதிக்கப்படவில்லை. இந்த கிராமம் சுதந்திரப் போராட்டத்துக்கான அடுத்தடுத்த தியாகிகளை வழங்கியதாகவும், நாதம்பாளையம் கிராம மக்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் ஆதரவாளராக இருந்தனர் என்றும், சிலம்பம், மல்யுத்தப் பயிற்சிகளை வழங்கியவர்களாகவும் பெயருண்டு.
991 ஆம் ஆண்டில், தேர்தல் காலத்தில் கட்சிக் கொடிகளுக்கு இடையே கடுமையான பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, கிராமத்தினர், எந்தவொரு கட்சிக் கொடியும் ஊருக்குள் பறக்கக் கூடாது என்ற தீர்மானத்தை எடுத்தனர். அதன்படி, தற்போது வரையும் இந்த நடைமுறை தொடர்கிறது. சுதந்திர தின விழா, தேசியக் கொடியுடன் கொண்டாடப்படும் இக்கிராமத்தில், குழந்தைகள் தேசத் தலைவர்களாக மாடலாக, ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கத்துடன் விழா நிறைவுறும்.