திருமலை: திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், வியாபாரிகள், கோவில் ஊழியர்கள், போலீசார், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் மோட்டார் சைக்கிளில் சென்று வந்தனர்.
விலங்குகளின் இனப்பெருக்க காலம் என்பதால் இரவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது ஆபத்தானது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக செப்டம்பர் 30ஆம் தேதி வரை திருமலை மலைப்பாதையில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மோட்டார் சைக்கிள்கள் இயக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வருகிறது. திருமலைக்கு மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
திருகல்யாண உற்சவம் ரத்து: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் சம்பங்கி மண்டபத்தில் பவித்ரோத்ஸவம் வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. இதனால் 18ம் தேதி காலை நடைபெற இருந்த திருக்கல்யாண உற்சவத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.