கிரீன்லாந்து: ஆகஸ்ட் 12-ம் தேதி நிகழும் முழு சூரிய கிரகணம் உலகின் சில பகுதிகளில் அரிய வானியல் நிகழ்வாக காட்சியளிக்கிறது.
கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ரஷ்யா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பகுதிகளில் முழு சூரிய கிரகணத்தை காண முடியும். உலகம் முழுவதும் சுமார் ஒரு பில்லியன் மக்கள் இந்த கிரகணத்தின் ஒரு பகுதியை காணும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்தியாவில் இந்த கிரகணம் தென்படாது; கிரகணம் நிகழும் நேரத்தில் இந்தியாவில் இரவு நேரமாக இருப்பதே இதற்குக் காரணம். வானியல் ஆர்வலர்கள் இந்த அரிய நிகழ்வை உலகின் பல பகுதிகளில் இருந்து கண்காணித்து வருகின்றனர்.
