சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தம்பதியினர் இன்று தங்களது 16-வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இதையொட்டி இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை ஆர்த்தி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சிவகார்த்திகேயன்–ஆர்த்தி தம்பதிக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராதனா, குகன், பவண் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
