சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘மொழியே’ வெளியாகியுள்ளது.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி–பாலாஜி தரணீதரன் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’.
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
1980-களின் பின்னணியில் கதை
1980-களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றத்தை ரசிகர்கள் மத்தியில் கவனிக்க வைத்தது.
அட்லீயின் ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘சினி1 ஸ்டூடியோஸ்’ இணைந்து படத்தை தயாரித்துள்ளன.
படத்தின் முதல் பாடலான ‘செல்ல மகளே’ மற்றும் மற்றொரு பாடல் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் மூன்றாவது பாடலாக ‘மொழியே’ வெளியாகியுள்ளது. கார்த்திக் நேத்தா பாடலை எழுதியுள்ள நிலையில், சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். ‘பத்தா’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
