வியட்நாமில் நடைபெற்ற 19-வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மாணவர்கள் அபார சாதனை படைத்துள்ளனர்.
இந்திய அணியினர் 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 5 வரை நடைபெற்ற இந்த சர்வதேச போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
வானியல் மற்றும் வானியற்பியல் துறையில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் முக்கியமான சர்வதேச போட்டியாக இது பார்க்கப்படுகிறது. இந்திய மாணவர்களின் இந்த வெற்றி நாட்டின் கல்வி மற்றும் அறிவியல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.
