நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் இளைய மகள் அஞ்சனா சர்ஜா தனது நீண்டகால காதலரை வரும் அக்டோபர் 18-ம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 13 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகவும், திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அஞ்சனா சினிமாவில் நடிப்பதை விட பேஷன் மற்றும் தொழில்முனைவில் கவனம் செலுத்தி வருகிறார். அர்ஜுன் சர்ஜா குடும்பத்தில் அடுத்தடுத்து திருமண நிகழ்வுகள் நடைபெறுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
