சென்னை: இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படம் குறித்த விவாதங்கள் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளன.
இந்தப் படத்தில் சூர்யா கண் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின. இதுதொடர்பாகக் காட்சிகளை எழுதியுள்ள டிராவிட் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
சூர்யாவின் கதாபாத்திரம் குறித்த இணையத் தகவலுக்கும் உண்மையான கதைக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
படத்தின் கதைக்களம், கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் சூர்யாவின் தோற்றம் குறித்து அதிகாரப்பூர்வமான கூடுதல் தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
