நடிகர் சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘ஹைட் அண்ட் சில்க்’ திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜேந்திர பாலா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
‘மண்டாடி’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் கவனம் பெற்ற சுஹாஸ், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாகிறது.
படத்தின் டைட்டில் புரமோவைத் தமிழ் ரசிகர்களுக்காக நடிகர் சூரியும், தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகர் வருண் தேஜும் வெளியிட்டுள்ளனர். படத்தின் கதைக்களம் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், புரமோ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
