தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை ஒட்டி தேசியக் கொடியேற்றப்பட்டு கிராம சபா கூட்டம் நடந்தது.
பூதலூர் ஊராட்சி ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியை ஊராட்சித் தலைவர் ஓ.கே.சுப்பையா ஏற்றி வைத்து பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைமை வகித்தார். தொடர்ந்து ஒரத்தூர் மயானக்கரைக்கு சாலை வசதி செய்து தர வேண்டும். ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிராம சபை கூட்டத்தில் துணைத் தலைவர் ஜெயக்குமார், வார்டு உறுப்பினர்கள் பவுல்தாஸ், சங்கீதா சுயம்பு, பாரதி தராப்தர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தோகூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.