சென்னை: 2022-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பொன்னியின் செல்வன்-1க்கு சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் வெகு உற்சாகத்தில் உள்ளனர்.
2022-ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம், சிறந்த தமிழ்த் திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகளை வென்றது.
காந்தாரா என்ற கன்னடப் படத்தில் நடித்த ரிஷப் பந்த் சிறந்த நடிகராகவும், திருச்சிற்றம்பலம் என்ற தமிழ்ப்படத்தில் நடித்த நித்யா மேனன் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த இசை அமைப்பாளராக, பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.