தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – 1 கப்
உருளைக்கிழங்கு – 1
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் 1 கப் ஜவ்வரிசியை நீரில் ஒருமுறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு வேர்க்கடலையை லேசாக ஒருமுறை வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு லேசாக ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு உருளைக்கிழங்கை துருவி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியில் உள்ள நீரை வடித்துவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் துருவிய உருளைக்கிழங்கை போட்டு, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின்னர் அதில் பொடித்த வேர்க்கடலை, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு சுவைக்கேற்ப சேர்த்து, நீர் ஊற்றாமல் நன்கு அழுத்தம் கொடுத்து பிசைய வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது எடுத்து, வடை போன்று தட்டையாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும. இதேப் போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான ஜவ்வரிசி வேர்க்கடலை வடை தயார்.