தேவையான பொருட்கள்:
புடலங்காய் – 1
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
பஜ்ஜி மாவிற்கு…
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/2 கப்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை வட்ட வட்டமாக வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புடலங்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், புடலங்காய் பஜ்ஜி ரெடி!!!