சென்னை: நகர்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஏராளமான இளைஞர்கள் போதைக்கு அடிமை ஆகிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் வேதனையுடன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தொண்டர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின் அவர் பேசியதாவது:
ஒரு இளைஞர் போதைக்கு அடிமையாகாமல் இருந்தால் நிச்சயம் அவர் ஒரு திறமை வாய்ந்த ஆசிரியர், எழுத்தாளர், நீதிபதி மற்றும் மருத்துவர் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பணிகளில் அமரலாம். ஆனால் நகர்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஏராளமான இளைஞர்கள் போதைக்கு அடிமை ஆகிறார்கள்.
குறிப்பாக 13 முதல் 19 வயது இருக்கக்கூடிய பருவத்தினர் கூட போதைக்கு அடிமையாவது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. என்னிடம் சாதியை ஒழிக்க முடியுமா. ஊழலை ஒழிக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியாது என்று தான் சொல்வேன்.
இருப்பினும் அதை ஒழிப்பதற்கான களப்பணிகள் மற்றும் போராட்டங்கள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்ட வருகிறது. மேலும் போதை பொருள் மற்றும் மது பழக்கத்தினால் அடிமையாவதிலிருந்து தடுக்க இது போன்ற விழிப்புணர்வுகள் தேவைப்படுகிறது என்று கூறினார்.