முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பதற்றத்திற்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் கருத்து புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லை பெரியாறு அணை தற்போது பாதுகாப்பாக இல்லை.எனவே அதற்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும்” என்றார். மேலும், “முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு? கேரளா கண்ணீரில் மூழ்கிவிடக்கூடாது” என்றும் அவர் கூறினார்.
இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சுரேஷ் கோபி விஷமத்தனமான கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்தி இடுக்கி மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்புகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தாம் கூறிய கருத்து ஆதாரமற்றது என்றும், அது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம் என்றும் செல்வப்பெருந்தகை கூறினார்.
சுரேஷ் கோபியின் இந்தக் கருத்துகள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், நீதிக்கும், பரஸ்பர மரியாதைக்கும் எதிரானது என்றும் கூறிய செல்வப்பெருந்தகை, இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.