ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘நினைத்தேன் வந்தாய்’ தொடரின் புதிய அப்டேட்ஸ் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன. இந்தத் தொடரில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் முழு நேர கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவர் கதைப்படி நான்கு குழந்தைகளுக்குத் தந்தையாக நடித்து, தன் மனைவி இறந்த பிறகு, குழந்தைகளை பாதுகாப்பதற்காக சுடர்விழி கதாபாத்திரத்தை வர வைக்கிறார்கள்.
இந்நிலையில், தொடரில் ஒடிசாவைச் சேர்ந்த ஜாஸ்மின் ‘சுடர்விழி’ கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது, அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாஸ்மினுக்குப் பதிலாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பரிச்சயமான அபிராமி அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபிராமி, ‘வீரா’ தொடரில் கேமியோ ரோலில் நடித்து, சின்னத்திரையில் அறிமுகமாகி இருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.