கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர் முகமது இலியாஸ் மாரடைப்பால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் அடுத்த மாதம் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார். இதில் 39 பேர் வேட்புமனு தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, சுயேட்சை வேட்பாளராக புட்டலம் மாவட்டத்தை சேர்ந்த இட்ராஸ் முகமது இலியாஸ் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த முகமது இலியாசுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே இலியாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலியாஸ் 1990-ல் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஜாப்னா தொகுதியில் வென்று எம்.பி.யாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.