சென்னை: நடிகர் சூர்யாவின் `கங்குவா’ வெளிநாட்டு உரிமம் ரூ.40 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா முதன்முறையாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள திரைப்படம்தான் கங்குவா.
வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக கங்குவா தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார்.
இந்தபடம் ஆயுதபூஜை தினமான அக்டோபர் 10-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்பட 10 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் “கங்குவா” படத்தின் முழு வெளிநாட்டு உரிமைகளையும் PHARS FILMS நிறுவனம் 40 கோடிக்கு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் வெளிநாட்டு திரையரங்கு உரிமைகளுக்காக இந்திய படத்திற்கு இதுவரை செலுத்தப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். ஒரு மல்டிஸ்டாரர் பெரிய பட்ஜெட் இந்தி படம் கூட இதற்கு முன் இந்த விலைக்கு விற்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.