பழநி முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி அரங்கத்தை பார்வையிட வரும் 30ம் தேதி வரை அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி, அருள்மிகு பழநி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை திறந்திருக்கும். கண்காட்சி அரங்கத்தை பொதுமக்கள் பார்வையிடலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம். இத்தகவலை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
பழநியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சி அரங்குகளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். பலர் தங்களது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோ, செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பிரசாதப் பை வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.