சென்னை: என்னை தலைவராக நியமிக்க காரணம்… இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை தலைவராக நியமித்துள்ளனர் என தமிழக பா.ஜ, தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: காமராஜர், எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டை சீரழித்து விட்டனர். தவழ்ந்து காலில் விழுந்து முதல்வர் ஆனவர் எடப்படாடி பழனிசாமிக்கு என்னை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
எனக்கு பாடம் எடுக்க வர வேண்டாம். திமுக அரியணை உதயநிதிக்கு போகும் போது கலவரம் வெடிக்கும் என்பதை நடிகர் ரஜினி, சுட்டி காட்டியுள்ளார். ரஜினி அவரது பாணியில் முதல்வரிடம் மறைமுகமாக கூறியுள்ளார். பிரதமர் மோடியைப்போலவே நடந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் ஆசைப்படுகிறார்.
திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க 2026 தேர்தல்தான் சரியான தருணம். திமுகவுடன் பாஜ எப்போதும் கூட்டணி வைக்காது. 2024 தேர்தலில் ஒரு மாற்றுசக்தியாக பா.ஜ நிரூபித்துள்ளது. கருணாநிதியின் அரசியல் வாழ்வு, தனிப்பட்ட வாழ்க்கையை பிரித்து பார்க்கும் பக்குவம் பா.ஜ.க.,வுக்கு உள்ளது. தொண்டர்களை கேட்டுதான் தேசிய கட்சியான பா.ஜ., முடிவு எடுக்கும்.
தமிழ்நாட்டில் எப்போதும் பா.ஜவிற்கும் திமுகவுக்கும் உறவு இருக்காது. நமக்கு திமுக, அதிமுக இருவருமே எதிரிகள் தான். இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை மாநில தலைவராக நியமித்து உள்ளனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.