சென்னை: செம கிரிமினல் மூளைப்பா… சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில், நகை கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது கடை உரிமையாளரே கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.
கடந்த 15-ம் தேதி, தான் நடத்திவரும் நகை கடைக்கு முக கவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் தன்னை தாக்கிவிட்டு 50 சவரன் நகைகளை திருடிச் சென்றதாக ரமேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட ஹரிஷத் குமாரையும், சுரேந்தர் சிங்கையும் ராஜஸ்தானில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது, கடை உரிமையாளர் ரமேஷ் குமார் கடனில் சிக்கியதால் அவர்களை வைத்து இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியதும், அதற்காக போலி நகைகளை பயன்படுத்தியதும் தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.