சென்னை: அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தை பொறுத்து வரும் நாட்களில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
தங்கம் விலையில் கடந்த ஆண்டு கடும் வீழ்ச்சி, அக்டோபர் 4-ம் தேதி ஒரு பவுன் ரூ.42,280-க்கு விற்கப்பட்டது. இதன்பின், இஸ்ரேல் – பாலஸ்தீன போரின் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து, டிச., 4-ல், பவுனுக்கு, 47,800 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
பின், மார்ச், 28-ல், ஒரு பவுன், ரூ. 50,000 வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன் பிறகு ஜூலை 17 அன்று ரூ.55,360 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில், கடந்த ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இதனால், காலையில் பவுன் ரூ.54,480 ஆக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், மதியம் கடுமையாக சரிந்து ரூ.52,400-க்கு விற்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் பவுன் ரூ.53,720-க்கும், கிராம் ரூ.6,715-க்கும் விற்பனையானது.
24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.57,360-க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை மாறாமல் ஒரு கிராம் ரூ.93.50 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.93,500 ஆகவும் உள்ளது.
அதே சமயம் கடந்த 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கடந்த 4 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டது. இந்த நாட்களில் 2 நாட்கள் மட்டுமே சந்தை விடுமுறை.
அதன்பின், நேற்றுமுன்தினம் சிறிதளவு அதிகரித்த தங்கம் விலை, நேற்றும் மாறாமல் இருந்தது. அதேபோல் வெள்ளியின் விலையில் கடந்த 27-ம் தேதி முதல் நேற்று வரை எந்த மாற்றமும் இல்லை. இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது:-
விலை ஏற்ற இறக்கத்திற்கு எந்த காரணமும் இல்லை. எந்தவொரு காரணியும் பொருளாதாரம், சந்தை போன்றவற்றை பாதிக்கும் போது மட்டுமே விலையில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே, விலை மாறவில்லை என்றால், அதை சந்தை நிலை என்று விளக்கலாம்.
அதே சமயம், அடுத்த மாதம் முதல் வாரத்தில், மத்திய வங்கி, வட்டி விகிதத்தில் மாற்றம் செய்வது குறித்து விவாதிக்கும். முடிவைப் பொறுத்து, தங்கத்தின் விலை இன்னும் கொஞ்சம் மாறலாம்.
வட்டி விகிதம் குறைவதால் தங்கத்தின் விலை உயரும். வட்டி விகிதம் அதிகரித்தால் தங்கத்தின் விலை குறையும். அதுவரை விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும் அல்லது மாறாமல் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.