சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்து அமைப்புகள், தன்னார்வலர்கள், ஊர்மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபடுவார்கள்.
பின்னர், ஒருவாரம் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெறும். பின்னர், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகளை போலீசார் வகுத்துள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லைக்குள் கடந்த ஆண்டு 1,519 விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு, அதை விட அதிகமான சிலைகள் நிறுவப்படும் என தெரிகிறது. இந்நிலையில், வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் இந்து அமைப்புகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து அனுமன் சேனா, பாரதிய ஜனதா, பாரத இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சட்ட திட்டங்கள் அமலுக்கு வரும். புதிய கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என போலீசார் தெரிவித்தனர். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பிரபல வேடமடை பின்புறம் 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகள் அமைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும், ஊர்வலத்திற்காக 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் முதல் செப்., 14, 15-ல் (சனி, ஞாயிறு) மற்றும் 11-ம் தேதி சிறு அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க, போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
அந்த நாட்களில் 16,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.