சென்னை: இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 2024 ஆகஸ்ட் மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயில் பாக்கெட்டுகள் வழங்கப்படும்.
துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டைப் பெறாத அட்டைதாரர்கள், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 2024-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதிக்குள் முழுமையாகப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.