சண்டிகர்: தேதி மாற்றம் செய்து அறிவிப்பு… ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதி அக்., 5-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
90 தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநில சட்டசபைக்கு வரும் அக்.,1-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை அக்.,4 ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் மாநிலத்தில் குரு ஜம்பரேஸ்வரர் அசோஜ் அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தேர்தல் தேதியை மாற்றி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தேசிய கட்சிகளான காங்.,மற்றும் பா.ஜ., மாநில கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தல் அக்., 1-ம் தேதிக்கு பதில் அக்.,5 ம் தேதி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை அக்., 4 ம் தேதிக்கு பதில் அக்.,8-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்து உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெறும் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் அக்.,4-க்கு பதிலாக அக்., 8-ல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.