‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ போன்ற படங்களில் அஜித் – த்ரிஷா இணைந்து நடித்துள்ளனர். இந்த இணை நடிகர்களில் அதிகம் பேசப்பட்ட ஜோடி.
தற்போது அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தேதிகளில் ஏற்பட்ட குழப்பங்களை எல்லாம் சமாளித்து, கடைசியில் அதை த்ரிஷா கைவிட்டார். இதனால் அஜித் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் கதாநாயகி ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இதற்கு த்ரிஷாவின் பெயரை அஜித் பரிந்துரை செய்துள்ளார். இதனால் த்ரிஷாவை சந்தித்து முழுக்கதையையும் கூற ஆதிக் ரவிச்சந்திரன் சம்மதித்துள்ளார்.
அஜித், த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.