கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணவாசி டிகேடிபிஎல் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.15 ஆக குறைக்கப்பட்டுள்ளது.இந்த மாற்றம் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இலகு ரக நான்கு சக்கர வாகனங்களுக்கான இருவழிக் கட்டணம் ரூ.90ல் இருந்து ரூ.85 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கனரக வாகனங்களுக்கான கட்டணமும் ரூ.160ல் இருந்து ரூ.155 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகள் மற்றும் லாரிகளின் மாதாந்திர கட்டணத்தில் ரூ.15 வரை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணக் குறைப்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. சுங்கச் சாவடியில் வருடாந்திர கட்டண திருத்தம் வழக்கமான நடைமுறை. மணவாசி சுங்கச்சாவடியில் கட்டண மாற்றம் அடுத்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்.
சுங்கச்சாவடி தொடங்கப்பட்டதில் இருந்து மூன்று முறை குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் உள்ள பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.