மதுரை: மதுரை அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வீடுகள் இல்லாமல் மழை, வெயிலில் குழந்தைகளுடன் சிரமப்பட்டு வந்த மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் தலா ரூ.4.34 லட்சம் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய 10 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் மொக்கத்தான்பாறை கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மலைகளில் தேன், கிழங்கு, மூலிகைகளை சேகரித்து விற்பனை செய்கின்றனர்.
இவர்களுடன் அவர்களது குழந்தைகளும் வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் சென்றதால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சேடபட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் வழக்கமான ஆய்வுக்கு சென்ற கலெக்டர் சங்கீதா, மதுரைக்கு திரும்பி வரும் வழியில், அருகில் உள்ள மொக்கத்தான் பாறை கிராமத்திற்கு சென்றார்.
இந்த கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்களின் வீடுகள் கூட சேதமடைந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது, தங்களது வீடுகள் சிதிலமடைந்து வீடுகளில் வசிக்க முடியாமல் தவிப்பதாகவும், மழைக்காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாமல் குழந்தைகளுடன் மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், இக்கிராமத்தில் முதற்கட்டமாக தலா ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய 10 புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுத்தார்.
ஊராட்சி ஒன்றியம் மற்றும் அப்பகுதி தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் இப்பணிகளை கலெக்டர் ஒருங்கிணைத்தார். தற்போது இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், திறப்பு விழா விரைவில் நடைபெறவுள்ளது.
விழாவில் பயனாளிகளுக்கு ஆட்சியர் வீடுகளை வழங்குவார். மலைக்கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கான்கிரீட் வீடு அமைத்து தங்கள் குழந்தைகளை படிக்க ஏற்பாடு செய்த கலெக்டருக்கு மக்கள் நன்றி தெரிவித்ததோடு, இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.