டெல்லி: மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வரும் 5-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழைக்கு 31 பேர் உயிரிழந்தனர்.
மேலும், வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் 4.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.