ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதில் இருந்து தமிழ் நடிகைகளும் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பேச ஆரம்பித்துவிட்டனர்.
அந்த வகையில் நடிகை கஸ்தூரி கூறியதாவது:-
பிரபல இயக்குனர் ஒருவர் இருக்கிறார். கதாநாயகிக்கான டேக்கை அவர் ஏற்கவே மாட்டார். முதல் நாள் முழுவதையும் ரீடேக் செய்து நடிகையை பாடாய் படுத்தி எடுத்து விடுவார்.
ஆனால் 3-வது நாள் வந்ததும் முதல் டேக்கிலேயே ஓகே சொல்லும் ஹீரோயினை தேர்வு செய்கிறார். அவர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்பது அங்குள்ள அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அந்த இயக்குனரைப் போல் எல்லோரும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதேபோல இதுபோன்ற பிரச்சனைகள் நடந்துள்ளதா என்று கேட்டால் கண்டிப்பாக நடக்கும்.
அதற்காக என்னை ஒரு படத்தில் இருந்து கூட நீக்கிவிட்டனர். இயக்குனருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளாததால் கிட்டத்தட்ட மூன்று படங்களில் இருந்து நீக்கப்பட்டேன்.
அதேபோல ஹீரோவுடன் ஒத்துப்போக முடியாமல் ஒரு படத்தில் இருந்து நானே விலகிவிட்டேன். அதேபோல இன்னொரு படத்தை முடித்துவிட்டு அந்த நடிகருடன் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டேன்.
சினிமா உலகில் தெரியாத பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இது சினிமாவில் மட்டுமின்றி எல்லா இடங்களிலும் பெண்களுக்கு ஒரே மாதிரியான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.