ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள ‘சிகந்தர்’. பான் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தை சஜித் நாடியத்வாலா தயாரிக்கிறார்.
கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சத்யராஜ், பிரதீக் பாப்பர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆக்ஷன் சார்ந்த இந்தப் படத்தில் நடிக்கும் போது சல்மான் கானுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு வந்துள்ளார். இந்த படத்திற்காக மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான தாராவி மற்றும் மாட்டுங்கா போன்று கோரேகானில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 15 கோடி செலவில் அமைக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ஆக்ஷன் காட்சிகள் மட்டுமின்றி எமோஷனல் காட்சிகளும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. இந்த ஷெட்யூல் முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.