சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:-
சென்னையை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட வடசென்னை அதி உய்ய அனல்மின் நிலையம் &-3, ஆறு மாதங்களாகியும் இன்னும் செயல்படவில்லை.
மின் வாரியத்தின் மொத்த நஷ்டம் ரூ.2 லட்சம் கோடியை நெருங்கினாலும், தமிழக அரசும், மின் வாரியமும் இதே அலட்சியத்துடன் செயல்பட்டால், மின் வாரியம் இப்போதைக்கு லாபம் ஈட்ட முடியாது.
எனவே தமிழக அரசும், மின் வாரியமும் நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்.