பஞ்ச ரத்ன கொழுக்கட்டை
தேவையானவை:
இட்லி அரிசி, துவரம் பருப்பு, பருப்பு, உளுத்தம் பருப்பு, கொண்டைக்கடலை – தலா ½ கப்
காய்ந்த மிளகாய் – 6
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
கடுகு – ½ தேக்கரண்டி
பெருங்காயம் தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
அரிசி மற்றும் பருப்பை சுத்தம் செய்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை சிட்டிகை செய்து கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலவையில் சிறிது சிறிதாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, வேக வைத்த உருண்டைகளைச் சேர்த்துக் கலந்து வதக்கவும். பஞ்ச ரத்ன கொழுக்கடை தயார்.