நடிகை தமன்னாவும், நடிகர் விஜய் வர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, இருவரும் காதலிப்பது தெரிய வந்தது.
விருது விழாக்கள், நிகழ்வுகள் என பல தளங்களில் ஒன்றாகத் தோன்றிய இந்த ஜோடி, தங்களது திருமணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
சமீபத்தில் காதலனுடனான திருமணத்தை தள்ளிப்போட தமன்னா அதிரடி முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இன்னும் திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்று தமன்னா கூறியுள்ளார். இந்த பதில் திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்த விஜய் வர்மாவுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக, விஜய் வர்மா மற்றும் தமன்னா இருவரும் தங்கள் காதல் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தி வந்தனர். ஆனால் திருமணம் பற்றி யோசிக்க தேவையில்லை என தமன்னா கூறியதை அடுத்து இவர்களின் உறவு எதிர்காலத்தில் எந்த லெவலில் இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருமணம் குறித்து கேட்டபோது, தமன்னா இப்போது தனது வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவதாக கூறினார். தற்போது திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்றாலும் நேரம் வரும்போது கண்டிப்பாக நடக்கும் என்றார்.
தமன்னாவின் இந்த முடிவு விஜய் வர்மாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. திருமணம் குறித்த எதிர்பார்ப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமன்னா தற்போது தென்னிந்திய படங்களில் மட்டுமின்றி பாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் பிசியாக பணியாற்றி வருகிறார். இதனால் தனது தொழிலை தொடர்வதற்காக அவர் தாமதிக்க முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தமன்னாவின் கேரியரில் மாடர்ன் ஹீரோயின்கள் அதிகரித்து வரும் நிலையில், அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகர்கள் நடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் தற்போது தமன்னா மூத்த நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
மொத்தத்தில், தமன்னா தனது திருமண முடிவை தள்ளிப்போட்டு வருவதாக கூறப்படுகிறது, இது அவரது ரசிகர்களையும் காதலன் விஜய் வர்மாவையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.