சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசு பெரும் தோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி, கோவை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் போதை கலாசாரத்தால் அரசியல் பிரமுகர்கள் முதல் பொதுமக்களுக்கு கூட பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.
படுகொலைகளுக்கு மது, கஞ்சா போதையே முக்கியக் காரணம் என்று கூறிய ராமதாஸ், தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடி, போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் கொலைகள் குறைவதுடன் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க முடியும் என்றார்.