தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை த்ரிஷா, சென்னையில் வசித்து வந்த சொகுசு வீட்டை பிரபல நடிகர் பானு சந்தருக்கு விற்றுள்ளார். த்ரிஷா தற்போது தொடர்ச்சியாக பெரிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் “லியோ” படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார், அதன்பிறகு அஜித்துடன் “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லி” ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.
25 ஆண்டுகளாக திரை உலகில் சிறந்து விளங்கிய த்ரிஷா, தற்போது தன்னுடைய சென்னை வீட்டை காலி செய்து வேறு இடத்துக்கு மாறியுள்ளார். இந்த வீட்டை வாங்கியவர் பானு சந்தர், தமிழ் திரையுலகில் காதல் நாயகனாக அறியப்பட்டவர். 1980ம் ஆண்டு வெளியான “மூடுபனி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பானு சந்தர், தற்போது 72 வயதானவராகவும், தனது மனைவியுடன் அந்த வீட்டை பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பானு சந்தர் சமீபத்தில் அளித்த பேட்டியில், த்ரிஷா வீட்டுக்குள் புதிய அமைப்புகளை சேர்த்துள்ளதாகவும், ஆனால் நான் குடிப்பதை விட்டு சுமார் 20 வருடங்கள் ஆவதால் அழகு சாதனப் பொருளாகஅதை அமைத்தேன்,” என்றார்.