ரஷ்யா: சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்த ரஷ்ய விண்வெளி வீரர்கள் 2 பேர் மற்றும் அமெரிக்க வீரர் ஒருவர் 3 பேர் நுழைந்துள்ளனர். இவர்கள் 202 நாட்கள் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.
ரஷ்ய விண்வெளி வீரர்கள் 2 பேரும், அமெரிக்க விண்வெளி வீரர் ஒருவரும் பயணித்த ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ்.26 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தது.
அவர்கள் மூவரும், 202 நாட்கள் அங்கு தங்கி, அறிவியல் சார்ந்த 42 ஆராய்ச்சிகளை மேற்கொள்ள போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்கனவே 16 விண்வெளி வீரர்கள் உள்ள நிலையில், தற்போது மேலும் 3 பேர் இணைந்துள்ளனர். இதன்மூலம், விண்வெளியில் முதன்முறை 19 மனிதர்கள் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.