சென்னை: இந்தியா – வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நேற்று இரவு சென்னை வந்தனர். விராட் கோலி லண்டனில் இருந்து நேரடியாக நேற்று அதிகாலை சென்னை வந்தார்.
இந்நிலையில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்கன் மோர்கல், உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோர் முன்னிலையில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 45 நிமிடங்கள் தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். இதேபோல், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வலை பயிற்சியில் தீவிரமாக இருந்தார்.