தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகர் விஜய், தனது கட்சியான ‘தமிழக வெற்றிக்கழகம்’ மூலம் அரசியல் களத்தில் நுழைந்துள்ளார். ஆனால், பல்வேறு தடங்கல்கள் மற்றும் சர்ச்சைகளால் அவர் எதிர்பார்த்த அரசியல் முன்னேற்றம் சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களாக, கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றில் ஏற்பட்ட சர்ச்சைகள் குறிப்பிடத்தக்கது.
விஜய் கட்சியின் பெயரிடல் தவறுகளும், அவரது கொடியின் வடிவமைப்பில் வரும் சின்னம் தொடர்பான விமர்சனங்களும் பரபரப்பை ஏற்படுத்தின. அதுமட்டுமின்றி, கொடியில் இடம் பெற்ற யானை சின்னத்தை பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இதனால் கட்சியின் கொடி மாற்றப்பட்டும் சர்ச்சைகள் தொடர்ந்தன.
விஜய் கட்சியின் முதன்மையான மாநாடு செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், காவல்துறையின் அனுமதி பெறுவதில் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டது. காவல்துறை விஜய் கட்சியினருக்கு 33 கேள்விகளை எழுப்பி, 21 நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கியது.
கட்சி நிர்வாகத்தில் விஜய்க்கு ஆலோசனைகளை வழங்க முதலாவது மற்றும் இரண்டாவது கட்ட தலைவர்கள் இல்லாததால், அரசியல் அனுபவமற்ற நிலை காரணமாக மாநாட்டின் தேதி மீண்டும் மாற்றப்பட்டு வருகிறது.