சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் முதல் செப்., 18 மற்றும் செப். 20-ம் தேதிகளில் இரவு 8.25, 8.55 மற்றும் 10.20 மணிக்கு திருவள்ளூர்-சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், அதே நாட்களில் சென்னை கடற்கரை – அரக்கோணம் வரை இரவு 8.05 மணிக்கு புறப்படும்.
செப். 19 மற்றும் 21-ம் தேதிகளில் கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரைக்கு அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், செப்., 18 மற்றும் 20-ம் தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டிக்கு செப்., 18-ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை – தாம்பரம் முதல் செப்., 18 மற்றும் 20-ம் தேதிகளில் 11.05, 11.30 மற்றும் 11.59 மணிக்கு புறப்படும் ரயில்கள், கடற்கரை – எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு செப்., 19 மற்றும் 21-ம் தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கடற்கரை – எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு – சென்னை கடற்கரையில் இருந்து செப்டம்பர் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரவு 9.10, 10.10, 11.00 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் – கடற்கரையிலிருந்து பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.
கூடுவாஞ்சேரி – சென்னை கடற்கரை முதல் செப்., 18 மற்றும் 20-ம் தேதிகளில் இரவு 10.10, 10.40 மற்றும் 11.15 மணிக்கு தாம்பரம்-கடற்கரை இடையே புறப்படும் மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
திருமால்பூர் – சென்னை கடற்கரை முதல் செப்., எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே 18 மற்றும் 20-ம் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இத்தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.