பிரபல நடிகர் ஜெயம் ரவி தற்போது தனது படத்தின் புரமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளார். சமீபத்தில் இவருக்கும் இவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், ஜெயம் ரவி விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கணவரை சந்திக்க முடியவில்லை என்றும், ஜெயம் ரவிக்கு பெற்றோர்கள் தலையிடுகிறார்கள் என்றும் ஆர்த்தி கூறுகிறார். இந்நிலையில் ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது மனைவி ஆர்த்தி தற்போது வரை இந்த கணக்கை பயன்படுத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தற்போது அவர் “மெட்டா” நிறுவனத்திடம் முறையிட்டு தனது பட ப்ரோமோஷனுக்கு தேவைப்பட்டதால் அதை திரும்ப பெற்றுள்ளார். செப்டம்பர் 10-ம் தேதி, ஜெயம் ரவி குடும்பநல நீதிமன்றத்தில் தனது திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள மனு தாக்கல் செய்தார், இது அடுத்த மாதம் 10-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில், பிரபல பாடகி ஒருவருடன் தனக்கு தொடர்பு இல்லை என்று ஜெயம் ரவி கடுமையாக மறுத்தார்.