ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் சிவகார்த்திகேயன் கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
இந்த படப்பிடிப்பிற்கு இடையே, சல்மான் கானின் படத்தையும் இயக்க ஏஆர் முருகதாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். ‘சிக்கந்தர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. இரண்டு படங்களையும் மாறி மாறி இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். சல்மான் கான் தொடர் தேதிகள் கொடுத்ததால் தற்போது ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இதனால் சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் படத்தை தொடங்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார்.
இதனால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு உதவப் போய் எங்கள் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என சிவகார்த்திகேயன் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தாமதமாகி வருவதால் அடுத்த ஆண்டு படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.