சென்னை: தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 7-ம் தேதி திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறைக்கு பிறகு. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து அக்டோபர் 7-ம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும்.
தமிழக பள்ளி பாடத்திட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த வகையில், நடப்பு கல்வியாண்டில், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு, செப்., 19-ல் துவங்கியது. இந்த வகுப்புகளுக்கான தேர்வு, செப்., 27-ல் முடிகிறது.
அதேபோல், 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் வரை நடக்கிறது. 27 வரை நடைபெறவுள்ளதை தொடர்ந்து, செப்., 28 முதல் அக்., 2 வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.