உக்ரைனில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இந்தியா முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று அதிபர் ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த கடந்த மாதம் பிரதமர் மோடி உக்ரைன் சென்றபோது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து, மோதலுக்கு விரைவில் தீர்வு காணவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் இந்தியாவின் முழு ஆதரவையும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
அண்மையில் அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை சந்திப்பதற்காக இருந்த சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி அதிகாலை டெல்லி திரும்பினார்.