மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதில் இருந்து, மலையாள திரையுலக பிரபலங்கள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.
அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் சித்திக் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசாரிடம் அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னை கைது செய்யாமல் இருக்க கேரள உயர்நீதிமன்றத்தில் சித்திக் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இதற்காக அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.