இந்திய டெஸ்ட் அணியில், தவிர்க்க முடியாத வீரராக திகழும் அஸ்வின் ரவிச்சந்திரன், இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 6 சதம், 14 அரை சதம், 522 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். 38 வயதுடைய அஸ்வின், தனது கிரிக்கெட் கரியரில் கடைசி கட்டத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.
இதனால், அவருக்கு மாற்றான வீரரை, இப்போது இருந்தே தேர்வு செய்ய பிசிசிஐ தீவிரம் காட்டும் எனக் கருதப்படுகிறது. இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வினுக்கு மாற்றாக சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள 6 வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
குல்தீப் யாதவ், சமீப காலமாகவே, இந்திய அணியில் ரெகுலராக வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இவர் 22 டெஸ்ட் இன்னிங்ஸில் 53 விக்கெட்களை எடுத்துள்ளார். அக்சர் படேலும் சிறப்பாக பந்துவீசக் கூடியவராக இருக்கிறார்.
மேலும் பேட்டிங் திறமையும் அதிகமாக உள்ளது. சாய் கிஷோர், சமீப காலமாகவே பெஸ்ட் ஆல்-ரவுண்டராக அசத்தி வருகிறார். சௌரப் குமார், 312 முதல்தர போட்டிகளில் 25 முறை 5 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
வாஷிங்டன் சுந்தர், 4 டெஸ்ட்களில் 6 விக்கெட்களை எடுத்துள்ளார், தற்போது முழு பிட்னஸில் உள்ளார். மனோவ் சுதர், கடந்த சில மாதங்களாக 75 விக்கெட்களை எடுத்துள்ளார், மேலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுகிறார்.