சென்னை: தமிழகம் முழுவதும் 1.55 லட்சம் மின் மீட்டர்களை மாற்றும் பணியில் மின்வாரியம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் வட்டத்தில் 29,217 மீட்டரும், கோவை வட்டத்தில் 6,606 மீட்டரும் சேதமடைந்துள்ளது.
மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் பழுதடைந்த 2 லட்சம் மின் மீட்டர்களை மாற்றி, புதிய மீட்டர்களை பொருத்த பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்சார வாரியம் மின்சாரம் சப்ளை செய்து வருகிறது.
இவ்வாறு வினியோகிக்கப்படும் மின்சாரம் மீட்டர் பொருத்தப்பட்டு, அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், பல மீட்டர் பழுதடைந்ததால், சரியான மின் நுகர்வு அளவிட முடியவில்லை.
இதனால் மின் வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தினாலும், மீட்டர் பழுது காரணமாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர். பழுதடைந்த மின் மீட்டர்களை மாற்றி அமைக்க வேண்டும் என மின் நுகர்வோரிடம் இருந்து ஏராளமான கோரிக்கைகள் மின் வாரியத்திற்கு சென்றுள்ளது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் பழுதடைந்த சுமார் 2.06 லட்சம் மீட்டர்களை மாற்றி புதிய மீட்டர்கள் அமைக்க மின் வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு மின் வாரிய முதன்மை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதில் சென்னை வட்டத்தில் 20,094 மீட்டர், காஞ்சிபுரம் வட்டத்தில் 39,477 மீட்டர், மதுரை வட்டத்தில் 18,278 மீட்டர், திருச்சி வட்டத்தில் 25,868 மீட்டர், திருநெல்வேலி வட்டத்தில் 25,540 மீட்டர் என மொத்தம் 10 வட்டங்களில் 2.06 லட்சம் மீட்டர்கள் சேதமடைந்துள்ளன.
பழுதடைந்த இந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பழுதடைந்த மீட்டர்களை அடுத்த பில் செலுத்தும் முன் மாற்ற வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை வட்டத்தில் 17,541 பேரும், காஞ்சிபுரம் வட்டத்தில் 23,989 பேரும், தஞ்சாவூர் வட்டத்தில் 3,127 பேரும், விழுப்புரம் வட்டத்தில் 3,177 பேரும், வேலூர் வட்டத்தில் 3,380 பேரும், திருவண்ணாமலை வட்டத்தில் 1,051 பேரும் மின் கட்டணம் செலுத்த தமிழகம் முழுவதும் மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அவற்றை உடனடியாக சேகரிக்க வேண்டும்.